காரைநகர் தரவைக் குளத்தில் தொடர்ந்து மண் அகழப்படுவதால் குளத்து நீர் உவர்நீராக மாறும் அபாயம் உள்ளது. எனவே மண் அகழ்வு உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் இணைந்து காரைநகர் உதவி அரச அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாட்டை விசாரணை செய்யும் கூட்டம் நேற்று முன்தினம் உதவி அரச அதிபர் பணிமனையில் நடை பெற்றது.
அந்த விசாரணையின் போது பொது மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைத் தனர்.
கோவளம் கடற்கரைப் பிரதேசத்தின் கரைக்கு அணை அமைப்பதற்காக சிவன் கோயிலடி தரவைக் குளத்திலிருந்து மண் அதிகளவில் அகழப்படுகின்றது. இதனால் குளத்து நீர் உவர்நீராக மாறும் அபாயம் உள்ளது.
அத்துடன் எமது பிரதேசத்திற்கும் கடல்நீரை உட்புகவிடாமல் அணை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்கான மணலை எமது பிரதேசத் திலேயே அகழ வேண்டிய தேவை உள்ளது. எனவே தரவைக் குளத்தில் மண் அகழும் நடவ டிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் எந்தவித முடிவும் எடுக்கப் படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ் விசாரணைக் கூட்டம் காரைநகர் உதவி அரச அதிபர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.நீர்ப்பாசனப் பொறியியலாளர், நீர்வள அதிகார சபை அதிகாரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Saturday, 9 August 2008
காரைநகர் தரவைக் குளத்தில் மண்அகழ்வதை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment