Friday, 8 August 2008

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செப்.9 ஆம் திகதி வேலை நிறுத்ததிற்கு முஷ்தீபு

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செப்.9 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் குதிக்க உள்ளதாக அக்கூட்டிணைவில் உள்ள சுகாதார தொழிற்சங்கத்தின் செயலாளர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார்.

30 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 4 இயக்கம் என்ற கூட்டமைப்பின் கீழேயே போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவகையிலான சம்பள உயர்வு, வாக்குறுதி அளித்ததன்படி வாழ்க்கைச் செலவுப்படி வழங்கப்படல்,

அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எரிபொருட்களுக்கான மானியம் வழங்குதல், தொழிலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்கும் அதேவேளை தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்தும் போராட்டங்கள் மீது அராஜகத்தைப் பாவிக்காதிருக்க உத்தரவாதம் வழங்குதல்,

தோட்ட மக்கள் முதல் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.


இது தொடர்பில் அரசுக்கு ஒரு மாத காலக்கெடு வழங்கியுள்ளதாக கூறிய அவர் இம்முறை தபால் துறைமுகம் தனியார் பஸ் அரச சேவைகள் கூட ஸ்தம்பிதமளவுக்கு பாரிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: