 இலங்கைக்கு  காணாமல் போதலில்  ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு(2008) மட்டும் 200 பேர் உத்தியோக பூர்வமாக காணாமல் போயுள்ளனர்
இலங்கைக்கு  காணாமல் போதலில்  ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு(2008) மட்டும் 200 பேர் உத்தியோக பூர்வமாக காணாமல் போயுள்ளனர்
ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்ட 38 வயதுடைய சண்முகம் காளிதாஸ் என்பவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவரின் மனைவி செல்வராஜா சுமதி முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
தந்தையான இவர் கடந்த கடந்த மாம் 28ஆம் திகதி காணாமல் போயுள்ளார். ஏறாவூரைப்  பிறப்பிடமாகக் கொண்ட தங்களது குடும்பம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட்டவளையில் வசித்து வருவதாகவும்
சம்பவ தினம் தயார் செய்யப்பட்ட நகைகளை  கொழும்பிற்கு ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் கொழும்பிலிருந்து தொலைபேசி மூலமாக வவுனியாவிலிருக்கும் தனது தாயாரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறியதாகவும் அதன்பின்னர்
இதுவரை அவரிடமிருந்து எதுவித தகவலும் வரவில்லை என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதேவேளை இது 200வது கடத்தல் அல்லது காணாமல் போன சம்பவம் எனக் கூறும் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஸ்ணன்
இவ்வருடத்தில் இதுவரை 200 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், 22 பேர் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதென்றும், 61 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனரென்றும் கூறினார்.
 எனினும் 116 பேர் தொடர்பாக இதுவரை எதுவித தகவலும் கிடைகக்வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Friday, 8 August 2008
இலங்கைக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
 

 
 
 

No comments:
Post a Comment