கடந்த இரண்டு ஆண்டுகளில், நாற்பதுனாயிரத்திற்கும் அதிகமான சிறீலங்கா படையினர், கடமைகளை விட்டு தப்பியோடியுள்ளனர்.
இவர்களில் இருபத்தையாயிரம் படையினருக்கு, சேவைக் காலத்தின்
அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கி, கடமைகளில் இருந்து
அவர்கள் விலகுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இடமளித்துள்ளது.
இவர்களை விட, போர் ஓய்வுக் காலப்பகுதியில் சிறீலங்கா
படைகளில் இணைந்து கொண்ட பதினையாயிரம் பேர், யுத்தம்
ஆரம்பித்ததும் கடமைகளை விட்டு தப்பியோடி தலைமறைவாகினர்.
இவர்களில் நான்காயிரத்து ஐநூறு பேர் கடமைகளுக்கு
திரும்பியிருப்பதோடு, மேலும் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்ந்த மிகுதி தொள்ளாயிரத்து ஐநூறு சிறீலங்கா
படையினரும், தலைமறைவாக இருப்பதாக தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment