சிறி லங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள், சேவைகள் மற்றும் உணவு மற்றும் பொருட்கள் விநியோகத்தில் பாரிய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமையம் தெரிவித்துள்ளது.
நடந்துவரும் யுத்தம் காரணமாக தற்பேவாது இடம்பெயர்ந்துவரும் மக்களுடன், எற்கனவே நலன்புரி நிலையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஜூலை மாத இறுதி வரை வன்னியில் சுமார் 57 ஆயிரம் பேர் நிர்க்கதி ஆகியுள்ளதாகவும், எனினும் தங்காளால் இயன்ற உதவிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான பேச்சாளர் கோடன் வெய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment