Tuesday, 5 August 2008

வட மாகாண முதலமைச்சர் பதவியை பிரபாவிற்கு வழங்குவதா நோக்கம்? தேசிய பிக்கு முன்னணி கேள்வி

வீரமிக்க படைவீரர்கள்?? தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து கிழக்கை மீட்டது மட்டுமல்லாது வடக்கை மீட்பதற்காக கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்துள்ள தீர்மானமானதொரு நிலையில் வட மாகாண முலமைச்சர் பதவியை பிரபாகரனிடம் வழங்குவதா அரசின் நோக்கம் என்று தேசிய பிக்குகள் முன்னணி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரபாவை வட மாகாண முதலமைச்சராக்குவது அரசின் நோக்கமா? அல்லது அமைச்சரின் நோக்கமாக? என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்து. தேசிய பிக்கு முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்: படையினர் கிளிநொச்சியில் காலடி எடுத்துவைத்துள் நிலையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடமாகாண முதலமைச்சர் பதவியை பிரபாகரனுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து அரசினுடையாதா அல்லது தனிப்பட்ட கருத்தா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். படை நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான கூற்றுகள் படையினரின் வலிமையை மலினப்படுத்தும் நடவடிக்கையாகும்.

பிரபாவுக்கு உயர் நீதிமன்று 200 வருடகால சிறைத் தண்டனை தீர்ப்பளித்துள்ளது என்பதை அமைச்சர் மறந்து விட்டாரா? இவ்வாறு அறிவிப்புகள் மற்றும் கூற்றுகள் அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையாகும் பால் குடித்தக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை குண்டுத்தாக்குதல் மூலமாக கொன்றொழித்த பிரபாகரனுக்கு வட மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டுமா?

பிராபகரன் பயங்கரவாதி மட்டுமல்லாது சர்வதேச பயங்கரவாத்தின் தலைவராவார். பிரபாகரனை தம்மிடம் கையளிக்குமாறு இந்தியா இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கேட்டள்ளது. இதனை நாம் மறக்க முடியாது. இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் தெரிவு செய்யபட்டது போல பிரபாவை வடமாகாண முதலமைசராக்குவதற்கு அரசு தயாராகின்றதோ? என்ற சந்தேகம் அமைச்சரின் கூற்றின் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: