Tuesday, 5 August 2008

திட்டம், கொள்கைகளில்லாத அரசு உலகில் இலங்கையில் மாத்திரமே

* சஜித் பிரேமதாச கூறுகிறார்

உலகில் திட்டமிடப்படாத, கொள்கையில்லாத அரசாங்கமொன்று இலங்கையில் மாத்திரமே உள்ளது. இதனாலேயே இலங்கை இன்றுபாரிய பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஐ.தே.க. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் அபிவிருத்தி குறித்தோ, பொருளாதார அபிவிருத்தி குறித்தோ எவ்வித செயற்திட்டங்களோ இல்லை.

நாட்டில் அதியுயர் பதவிகளை வகிப்பவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் எவருக்கும் நாடு குறித்தோ, நாட்டு மக்கள் குறித்தோ எவ்வித அக்கறையுமில்லை.

எனது நோக்கம் என்னை வலுப்படுத்துவதில், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க வேண்டுமென்பதாகும். அதற்கு ஐ.தே.க. சரியான தெரிவாகும்.

பரம்பரையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தவர்கள், இன்று நாட்டின் நிலைகுறித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்படுபவர்கள், மக்களின் சாபத்திற்குட்படுவார்கள் இன்று நாட்டில் மனித வளம் சூறையாடப்படுகின்றது. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது. நாட்டின் அரச மற்றும் உயர்பதவிகளின் பவித்திரத்தன்மையை (தூய்மையை) பேண ஐ.தே.காவினால் மாத்திரமே முடியும் என்றார்.

No comments: