பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் சிப்பாய் ஒருவருக்காக சுமார் 500 ரூபா செலவிடப்படுவதாகவும் குறித்த உயர் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment