மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பிரதேசத்துக்குட்பட்ட தாராவில்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் ஐந்து படையினர் காயமடைந்தனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தாராவில்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரையும், படையினரையும் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரமொன்றில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமோர்க் குண்டே வெடிக்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையும் தொப்பிகலப் பிரதேசத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment