யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment