Monday, 4 August 2008

புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தமிழ் மாணவர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனக் கூறியே இவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த கலைப்பீட மாணவர் ஒருவரே கைதுசெய்யப்படடிருப்பதாகவும், குறித்த மாணவர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிலியந்தலையில் இடம்பெற்ற பேரூந்துக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொறட்டுவை பல்லைகழக்க தமிழ் மாணவர் ஒருவர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: