யாழ் நல்லூர் திருவிழா நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறையினர் மறுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா, எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவை அரை மணி நேரங்களால் குறைப்பதற்கு சிறீலங்கா படைத்தரப்பு முன்வந்துள்ளது.
இரவு 9:00 மணி முதல் அதிகாலை 4:30வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்தது.
ஆலய நிருவாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, திருவிழாக் காலங்களில் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 4:00 மணிவரை ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த படையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
Tuesday, 5 August 2008
யாழ் நல்லூர் திருவிழா நாளை ஆரம்பம் – பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment