இந்திய சுதந்திர தினத்தன்று கச்சதீவில் தேசியக்கொடியை ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தஞ்சையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியவை வருமாறு:-
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கச்சதீவு இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்டதே காரணமாகும். தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய சுதந்திர தினமான ஓகஸ்ட் 15ஆம் திகதி ‘கச்சதீவில்’ தேசியக்கொடி ஏற்றப்படும்.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் இக்கொடியேற்ற விழாநடைபெறும். எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment