இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் தொடர்பில் எவ்வளவு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் குறைந்தபட்சம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேசப்பற்றாளர் என்ற பெயர்ப் பலகையை கழுத்தில் தொங்க வைத்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வாரத்திற்கு ஒரு முறை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று வருவதாகவும் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளதாகவும் சோமவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு என்ற தலைப்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதியே இந்திய அதிகாரிகள் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வீ.பீயினர் இந்தியா எதிர்ப்பு கட்சி என சிலர் குற்றம்சுமத்துகின்றனர். உண்மையில் ஜே.வீ.பீயினர் இந்திய எதிர்ப்பாளர்கள் என்றால் அதற்கான பொறுப்பை இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளே கூறவேண்டும் எனவும் ஜே.வீ.பீயின் தலைவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment