ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவங்களுக்கு எதிராக விசேடமாக சிரச ஊடகம் மீது மேர்வின் சில்வா தொடர்ந்தும் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் இடையூறுகளையும் சமூகம் என்ற வகையில் தொடர்ந்தும் பொறுத்து கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
மேர்வின் எதிராக காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஸாந்த வர்ணசிங்க அமைச்சரின் நடவடிக்கை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரை எச்சரிப்பதன் மூலமமோ அறிவுரை கூறுவதன் மூலமோ எந்த பலனும் இல்லை. ஆண்டவன் அவரை தண்டிக்கும் வரை சமூகத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் காத்திருக்க முடியாது எனவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
Saturday, 9 August 2008
ஆண்டவன் மேவினைத் தண்டிக்கும் வரை காத்திருக்க முடியாது - ஹெல உறுமய
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment