Wednesday, 6 August 2008

சவரக்கத்தியை காட்டி கமிராவை அபகரித்துச் செல்லும் போதும் பொலிஸ்மா அதிபர் நித்திரை கொள்கிறார். - லக்ஷ்மன் செனவிரத்தன எம்.பி.

ராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும். இலங்கை மீதிருந்த கரும்புள்ளி கருவடுவாக மாறியிருக்கும் என்று அவர் குற்றஞ்சாட்டியனார்.

நாராயணன் வாடகை வாகனத்தில் செல்லுமளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அமைச்சர்கள் வாடகை வாகனங்களில் செல்ல முடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நேற்று அவசரகால சட்ட பிரேரணை நீடிப்பின் போது பேசிய பா.உ லக்ஷ்மன் செனவிரத்தன மேலும் :

இராணுவத்தினா படையை விட்டு வெளியேறும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கள நிலைமைகள் தெரிவிக்கினறன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுத்தத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான செய்தியை அறிவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தளபதி யுத்தத்தை நடத்திச் செல்வது குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவது குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்களை கூறமுடியாது.

ராஜீவைத் தாக்கிய சொய்ஸா போன்ற இராணுவ வீரர்கள் இன்று இருந்திருந்தால் மன்மோகன் சிங்கிற்கும் நாராயணனுக்கும் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ராஜீவுக்கு நிகழ்ந்த அவமானத்தால் இலங்கையை உலக நாடுகள் கேவலமக நோக்கின.

பீச் போய்கள் பாராளுமன்றுக்கு வந்துள்ளனர். ஒருவர் சவரக்கத்தியை காட்டி கமராவை களவெடுத்துச் சென்றார். மற்றோரு பீச் போய் ரயில் சங்கிலியை களவெடுத்துச் செல்கிறார். பொலிஸ்மா அதிபர் நித்திரை கொள்கிறார்.

பொலிஸாரின் முன்னிலையிலே ஊடகவியலாளர் தாக்கப்பட்டு கமரா பறிக்கப்பட்ட போது பொலிஸ் உயர் அதிகாரிகள் மறுபக்கம் திரும்பிக் கொண்டு நின்றார்கள்.

தம்புத்Nதுகமவில் இலக்கத் தகடற்ற வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதற்கு சென்றால் பொலிஸ் நிலைய கதவை உயர் அதிகார பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

அங்குள்ள பொலிஸார் பேட்டி பிரேம்லாலின் பொலிஸாரா அல்லது இலங்கை பொலிஸாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் தேர்தல் வன்முறைகள் இடம் பெறும் போதும் பொலிஸ் மா அதிபர் நித்திரை கொள்கிறார்.

அவரசகாச் சட்டத்;தின் கீழ் மக்கள அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அரசு ஆட்சி நடத்துகிறது. இலங்கைத் தீவு குழிக்குள் செல்லுகிறது.

பொலனறுவையில் பிள்ளையானின் பதினோரு முகாம்கள் உள்ளன. அங்கு ஆயுதங்களை தாங்கியவாறு ஆயுதக் குழு உறுப்பினர்கள் சுற்றித் திரிகின்றனா, இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனா. இதனால் வாக்குச் சாவடிக்கு முகவராக செயற்படக்கூட மக்கள் முன்வரபயப்படுகின்றனர்.

நாட்டில் இன்று மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்வதோடு ஊடகங்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சர்வதேச அமைக்புகள் இலங்கை மீது தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

நன்றி வீரகேசரி

No comments: