இலங்கை இராணுவத்துக்கு தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமென ஹெல உறுமைய பா.உ எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்துள்ளார்.
மேலும் : இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறினர்.
ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகிறோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம்.
அதே வேளை, தற்போது பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனேனில், இது தொடர்பில் எமக்கு ஏற்கனவே அனுபவங்கள் உண்டு. எனவே, இவ்விடயத்தில் தீவிர ஆலோசனைகளை நடத்த வேண்டும்.
நன்றி தினக்குரல்
Wednesday, 6 August 2008
ஸ்ரீ லங்கா தான் அடுத்த வல்லரசு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment