சார்க் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றாம் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் மததலைவர்களுடன் அமர்ந்திருந்த போது,
அங்கு சென்ற சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டார முதல் வரிசை ஆசனத்திற்கு அழைத்து சென்று அமரச் செய்தார். அதுவரை முதல் வரிசையில் அமர்ந்திருந்த சபாநாயகரின் துணைவியார் மூன்றாம் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார்.
முன்னாள் பிரதமருக்கு மூன்றாம் வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு முதல்வரிசை ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment