Saturday, 2 August 2008

சார்க் நாடுகள் செய்மதிகள் மூலம் புலனாய்வு தகவல்களை வழங்க திட்டம்

சார் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், பிராந்திய நாடுகளின் தலைவர்களிற்கு; இடையே காணப்பட்ட இணக்கத்தினை எதிர்க்க விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனால் புலிகளை தோற்கடிக்க சார்க் நாடுகள் கூட்டு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சார்க் நாடுகள் தற்போது வழங்கி வரும் புலனாய்வு ஒத்துழைப்புகளை மேலும் வினைதிறன்மிக்க வகையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவற்றின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளை அந்த நாடுகளில் தடுத்தல், அவர்களின் திட்டங்களை அறிந்து கொள்ள இலங்கைக்கு நவீன வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக செய்மதிகள் மூலம் சார்க் நாடுகள் பெற்றுக்கொள்ளும் புலனாய்வு தகவல்களை உடனுக்கு உடன் இலங்கையின் புலனாய்வு துறையினருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments: