Saturday, 2 August 2008

மன்னார் மாவட்டத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்

மன்னார் வெள்ளாங்குளம் நகரை படையினர் இன்று (ஆகஸ்ட் 02) கைப்பற்றியதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்களை அடுத்து படையினர் மன்னார் மாவட்டத்தை முழுமையான தமது காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் கிளிநொச்சி நோக்கி நகர்ந்துள்ளதாகவும் தேசியப் பாதுகாப்பு ஊடகத்தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளாங்குளம் நகரம் மன்னாரில் விடுதலைப்புலிகளின் காட்டுப்பாட்டில் இறுதியாக இருந்த அவர்களின் பிரதான கோட்டை எனவும் இந்த பிரதேசம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேசங்களுக்கான புலிகளின் விநியோகத்திற்கு தடையேற்பட்டுள்ளதாகவும் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை மன்னார் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மோதல்களில் 11 படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தரப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தேசியப் பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும் வவுனிக்குளம் மற்றும் மல்லாவி மோதல்களில் 30 படையினர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் படையினரின் மூன்று சடலங்களை தாம் கைப்பற்றியதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.

No comments: