Thursday, 14 August 2008

கிருளப்பனையில் தமிழ் வர்த்தகரிடம் கப்பம் பெற முயன்றவர் கைது

கொழும்பு கிருளப்பனையில் வசிக்கும் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் 100 லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற போது, கப்பம் பெறும் குழுவின் உறுப்பினர் ஒருவரையும், முச்சக்கர வண்டியின் சாரதியையும் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து இவர்கள் நேற்று முன்தினம் (12) காவற்துறையின் சிறப்புக் குழுவொன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கப்பம் பெற முயன்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட கப்பம் பெறும் குழுவின் உறுப்பினர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் நபர் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் அனுர சேனாநாயக்க கூறினார்.


சந்தேக நபருடன் கைதுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதி, சந்தேக நபரினால் முச்சக்கர வண்டி வாடகைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் அவருடன் சென்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் சேனாநாயக்க குறிப்பிட்டார்.

No comments: