மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் காணாமல் போயியுள்ளார்.
பாலசுப்ரமணியம் கிரிஸாந் என்ற 17வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்ற நிலையில் வீடு திருப்பவில்லை என அவரது தாயாரான பத்மா பாலசுப்ரமணியம் மட்டக்களப்பு காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
புத்தூர் 7 ஆம் குறுக்கு ஒழுங்கையை சேர்ந்த இளைஞரே இவ்வாறு காணாமல் போயியுள்ளார். குறித்த இளைஞர் ஊரணியில் உள்ள அமெரிக்க மிஷன் தொழில்பயிற்சி கல்லூரியில் தச்சுத்தொழில் பயின்று வந்துள்ளார். புத்தூர் மட்டக்களப்பு நகரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment