Tuesday, 5 August 2008

வான்வழித் தாக்குதலைக் கண்டிக்க மாட்டேன் – பிள்ளையானின் விசுவாசம்

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களைக் கண்டிக்க மாட்டேன் என, T.M.V.P துணைப்படைக் குழுவின் துணைத்தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தெற்கிலும், சிறீலங்காவின் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் அவர் நியாயம் கற்பித்திருக்கின்றார்.

சார்க் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியாளர்கள் சந்திரகாந்தனைச் சந்தித்தபோதே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளை அழித்து, வன்னியை மீட்கும் சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் அகப்பட்டுள்ள மக்களிற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், இது அவர்களின் நிர்ப்பந்தம் எனவும் அவர் கூறினார்.
.

No comments: