சிறீலங்கா வான் படையினரால் செஞ்சோலை வளாகத்தில் 52 மாணவிகள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் நாள் செஞ்சோலை வளாகம் மீது சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் மேலும் 129 பேர் வரையில் படுகாயம் அடைந்திருந்தனர்.
முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் 400 மாணவிகள் வரையில் கற்றலில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு விரைந்த 4 சிறீலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் 16 குண்டுகளை வீசியிருந்தன.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவி ஒருவர் கண்டியில் முறையான சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது புறக்கணிக்கப்பட்டதால், அவரும் உயிரிழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சோலை படுகொலையை நினைவுகூரும் வணக்க நிகழ்வுகள் இன்று யேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற புலம்பெயர் நாடுகளில் நடைபெறவுள்ளன.
Thursday, 14 August 2008
செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள் இன்றாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment