Friday, 8 August 2008

திருகோணமலையில் முச்சகர வண்டிச் சாரதி கடத்தப்பட்டுள்ளார்

திருகோணமலை நீதிமன்ற வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இனந்தெரியாததோர் கடத்திச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட்7) மாலை நடைபெற்றதாக திருகோணமலை காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

37 வயதான முத்துகுமார் கமலேஸ்வரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சாந்தி காவல்துறையினரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டவர் 10 வருடங்கள்; வன்னியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியில் இருந்தமையே அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகிறது.

No comments: