Sunday, 3 August 2008

மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் மட்டக்களப்பு ஓட்டமாவடி மாஞ்சோலையில் வீடுகள் எரிப்பு

fire.jpgமட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தின் மாஞ்சோலையில் பகுதியில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை இனந்தெரியாதோர் நேற்று தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.


18 தற்காலிக வீடுகள் இந்த தீயினால் சேதமடைந்துள்ளது.1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இந்த வீடுகளில் தங்கியிருந்தனர்.

இந்த மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: