Monday, 4 August 2008

வன்னியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கையில் வாகனம் தடம் புரண்டு குழந்தை பலி

இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தவர்களின் வாகனம் தடம்புரண்டதில் குழந்தை பலியான துயரச்சம்பவம் ஒன்று வன்னியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது

கனகரயான் குளத்தில் வசித்து வந்த கிவேஸ்குமார் என்பவர் தனது மனைவி இரண்டு வயதுப் பெண் குழந்தையுடன் இடம்பெயர்ந்து முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது மாங்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி சில்லு காற்றுப் போனதால் தடம்புரண்டது

அப்போது யசோதினி என்ற அக்குழந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது என தெரிவிக்கப்படுகிறது.

No comments: