Monday, 4 August 2008

சிரச ஊடகவியலாளர்களை மேர்வின் சில்வா மீண்டும் தாக்கியுள்ளார்.

காலஞ்சென்ற ஜெயராஜ் பிரானாந்துபிள்ளையின் ஞாபாகார்த்த பாலத்தின் இரண்டாவது கட்ட நிகழ்வுகளின் போது மீண்டும் மேர்வின் சில்வா சிரச ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளார்.

பிரதமர் ரத்னசிறி விக்ரமனாயக்க பாலத்தை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் தமது கேமராக்களை தயார் செய்கையில் அதை மேர்வின் சில்வா தடுக்க அவரது அடியாட்கள் ஊடகவியலாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து சென்றுள்ளனர்.

இச்சந்தர்பத்தில் அவ்விடத்தில் இருந்த போலிஸ் அதிகாரிகள் இக்காட்சியை படம் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

தாக்குதலிற்கு உட்பட்ட ஊடகவியலாளர்கள் பேலியாகொட போலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

களனி தொகுதியில் மேர்வின் சில்வா பங்கேற்கும் எந்தவிதமான உற்சவங்களிலும் சிரச ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்பட பிடிப்பாளர்களை அனுமதிக்க மறுப்பது சில காலங்களாகவே நடைபெற்று வருகிறதாக தெரிவிக்கின்றன.

No comments: