Monday, 4 August 2008

ஆபாச இணையத்தளங்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்திட்டங்களை கொண்டுவரும்படி தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் மாணவர்களும், சிறுவர்களும் ஆபாச இணையத்தளங்களை பார்க்கிறார்கள் என சிறுவர் அமைப்புக்கள் சில ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் முறைப்பாடு முன்வைத்ததையடுத்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனைகளில் முக்கியமாக ஆபாச இணையத்தளங்களை தணிக்கை செய்வது பற்றி கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: