 இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.    
இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெருமையாகப் பேசப்பட்டுள்ளது. தாம் கிளிநொச்சியைப் பிடித்து அங்கும் ஜனநாயகத்தை நிறுவப் போகிறோம் என இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் போது கருத்துரைத்துள்ள இந்தியப் புலனாய்வுத் துறை இந்த விடயத்தில் இலங்கைத்  தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.  தமது புலனாய்வுத் தகவல்களின்படி  இலங்கைப் படையினர் தமது தாக்குதல்களையும் முனைப்புகளையும் குறைப்பதே சிறந்தது
என இந்தியப் புலனாய்வுத் துறையினர் அறிவுரை வழங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகள் புதுவகையான ஆபத்தான தாக்குதல் ஒன்றை நடத்துவதற்குரிய ஏதுநிலைகள் இருப்பதாக இதன்போது இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே அதற்குப் பின்னர் இந்தியாவின் உதவியைக் கோருவதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்தக் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் சந்தித்தபோதும் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்களா? என இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வினவியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயம் குறித்து எங்களைக் காட்டிலும் உங்களுக்கே அதிகமாகத் தெரிந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தநிலையில், இலங்கைப் படையினர் இந்த யுத்தத்தில் வெற்றி பெறமாட்டார்கள் என இந்தியப் பிரதமர் சிரித்துக்கொண்டே குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் ரா. சம்பந்தன், இந்தியப் பிரதமரிடம் சில விடயங்களைப் பயமின்றி சுட்டிக் காட்டியதாகத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.
இந்தியா, இதுவரை காலமும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியுள்ளது. இந்தியாவே இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு உதவியது. அதே இந்தியாவே இன்று அந்தப் போராட்டத்திற்கு எதிராகவும் செயற்படுகிறது எனச் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தியப் பிரதமருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குழுவுக்குமிடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது  இந்தியப் பிரதமர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்களையும் இராஜதந்திரத் தரப்புகள் கவனத்தில் கொண்டுள்ளன.
இதன்போது இந்தியப் பிரதமரிடம் இலங்கையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் தமிழர்கள் நடத்தப்படும் முறைகள் குறித்து மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுவித்ததாகக் கூறுகிறது.
இந்தச் செய்தியை அடுத்து இலங்கையில் உள்ள தமிழர்கள் இரண்டாம்பட்சப் பிரஜைகளாகவே அரசாங்கத்தினால் கருதப்படுகின்றனர்.
இந்தநிலையில் வடக்கையும் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்  இலங்கையில் தமிழர்கள் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங், வடக்கைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழர்கள் நசுக்கப்படுவார்களானால், அதனை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியப் பிரதமரிடம் முன்வைத்துள்ளது.தற்போது இலங்கையில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மாணிக்கம் இடமாற்றலாகிச் செல்லும் நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தகவல் அறிந்த தரப்புகள், இன்னும் 5 வருடங்களில் மாணிக்கம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளன.
நன்றி:http://www.tamilwin.com/view.php?2a26QVR4b33N9E8e4d46Wn5cb0bf7GU24d3aOpD3e0dVZLuQce02g2hF0cc3tj0Cde
 

 
 
 

No comments:
Post a Comment