Wednesday, 6 August 2008

கிழக்கில் அமைச்சர்கள் சிலர் முஸ்லீம் இளைஞர்களை ஆயுதமயப்படுத்துகின்றனர் - ஹக்கீம்

கிழக்கைச் சேர்ந்த அரசாங்க அமைச்சர்கள் சிலர் முஸ்லிம் இளைஞர்களை ஆயுத மயப்படுத்தி தமது குறிக்கோளை அடைய முயற்சிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய அவர் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அண்மைய அறிக்கையை மேற்கோள் காட்டியே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இதேவேளை மட்டக்களப்பு மசூதிகளின் கூட்டமைப்பு விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில் ஏறாவூரைச் சேர்ந்த ஒருவர் யூலை மாதம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள தென்றும் அவ்வாறான ஒருவர் யூலை 14ஆம் திகதி வெள்ளைவானில் சென்றவர்களால் கடத்தப்பட்டதாகவும் பலத்த சித்திரவதையின்பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

No comments: