Wednesday, 6 August 2008

அணுத் தொழில்நுட்பம் இலங்கையுடன் பணியாற்ற தயார் - ஈரான் அறிவிப்பு

அணுத் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையுடன் சேர்ந்து தொழிற்படத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் முட்டாகி தெரிவித்துள்ளார்.

15வது சார்க் மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த ஈரானிய வெளிநாட்டமைச்சர் இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள், எல்லாத்துறைகளிலும் இரண்டு நர்டுகளும் இணைந்து தொழிற்படுகின்றன.

அந்த வகையில் யரேனியத் தொழில்நுட்பம் தொடர்பாகவும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பற்றின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் தொழிற்படுகின்றன.

அந்த நம்பிக்கையினதும் நட்பினதும் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை பணத்தை இலங்கையின் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கென ஈரான் வழங்கியுள்ளது.

அவற்றுள் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், உமா ஓயா நீர்ப்பாசனத்திட்டமும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: