Wednesday, 6 August 2008

எம்பிலிப்பிட்டி லக்சனகம வாவியை அண்மித்த காட்டுப் பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு மீட்பு

கொழும்பு ராஜகிரியப் பிரதேசத்தை அண்மித்த எம்பிலிப்பிட்டி லக்சனகம வாவியை அண்மித்த காட்டுப் பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்றினை பொலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலீசாருக்குக் கிடைத்த தொலைபேசித் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக எம்பிலிப்பிட்டிய பொலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட எலும்புக்கூடு சில மாதங்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டியவில் காணாமற்போன தனது மகளுடையதென தாயார் ஒருவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான வைத்திய பரிசோதனை இன்று நடைபெறுவதாக எம்பிலிப்பிட்டி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக்குமார தெரிவித்துள்ளார்.

No comments: