Tuesday, 5 August 2008

விமானத் தாக்குதல் ரவைகளை வைத்திருந்த இராணுவ வீரர் கைது


விமானத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் விசேட ரவைகளைத் தம்வசம் வைத்திருந்த இராணுவப் படைவீரர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் குறித்த ஆயுதங்களை இராணுவ வீரர் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராணுவப் படைவீரரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் படைவீரருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்படுகிறது.

No comments: