துட்டகைமுனுவின் வழக்கத்திற்கு அமைய புத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் யுத்தம் புரிய வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாது போனால் சிங்கள கலாசாரம் அழிந்து போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மதத்தினர் எப்படி யுத்தம் செய்யலாம் என தமிழர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர்.
தமது மதத்தை பரப்புவதற்காக கொலைகளை செய்தவர்கள் பௌத்தர்கள் மாத்திரமே என அவர் கூறியுள்ளார். பொறுமை என்ற பண்டைய மரண தண்ணீரின் இறுதிக்கு செல்ல இடமளிக்க முடியாது.
அரச அதிகாரம் சிங்களவர்களுக்கு இல்லாது போனால் பௌத்த சாசனம் காணாமல் போவதுடன் பௌத்த தர்மமும் காணாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஜே.வீ.பீ 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையை நினைவுறுத்தி சுவரொட்டிக்களை ஒட்டுகிறது. 83 கலவரம் அரசியல்வாத அடியாட்களின் நடவடிக்கையே அன்றி சிங்கள பௌத்தர்களின் நடவடிக்கை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்றும் பெரும்பாலான தமிழர்கள் வாழ்ந்து வருவதால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. தற்போது மேற்கொள்ளப்படுவது மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மனிதநேய யுத்தமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, 10 August 2008
அரச அதிகாரம் சிங்களவர்களுக்கு - இல்லையேல் பௌத்தம் காணாமல் போய்விடும்- சம்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment