Sunday, 10 August 2008

தமது இறுதி போராட்டத்தின் போத விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும்

யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசைகொண்டவர்,

சாவுக்கு பயந்தவர் அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை விடுதலைப் புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இன்தோனேசியா அல்லது காம்போஜயாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது இறுதி போராட்டத்தின் போத விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை விடுதலைப் புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையயாள் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோழ்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச பாடையினரிடம் சரணடைந்து விடுமாரு விடுதலைப் புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.

No comments: