அம்பறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையில் - விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி - விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் முயற்சியில் அங்கு நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த மாதம் இவ்வகையான தேடுதல் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா விசேட அதிரடிப்படையை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, அம்பறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் கடந்த மாதம் முகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தி அவர்களை கலைத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment