பதில் சொல்வோம்
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
இன்று எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பல சாவால்களுக்கு மத்தியில் உலகத்தின் மனட்சாட்சியை தட்டிவிடும் அளவிற்கு உயர்ந்து வந்துவிட்டது. இக்காலங்களில் எமது மக்களும் விடுதலைக்காக போராடும் போராளிகளும் பல பின்னடைவுகள் வந்ததும், அது மீண்டதும் பின் பின்னடைவுகள் வந்ததும் விடுதலைப்போராட்டத்திற்கு புதியவையல்ல.
நாங்கள் மீண்டும் எமது இடங்களை மீட்போம். அதற்கு துணைநிற்க வேண்டியவர்கள் நீங்களே. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது எமது மண்ணையும் மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து விற்கும் துரோகிகள் அதிகரித்து விட்டார்கள்.
அவர்களின் சுகபோக வாழ்க்கைக்காக இதை செய்கின்றார்கள். இதை மக்களும் போராளிகளுமே எதிர்த்து நின்று காக்கவேண்டும். மீண்டும் மட்டக்களப்பு எங்கும் உங்கள் பிள்ளைகள் (போராளிகள்) நிற்கின்றனர். அவர்களை தாங்கவேண்டியவர்கள் நீங்களே தப்பித் தவறியும் உங்கள் வாயில் இருந்துவரும் வார்த்தைகள் அவர்களுக்கு இடர்களை ஏற்படாதவண்ணம் இருக்கட்டும்.
அன்பார்ந்த மக்களே ஆசைவார்த்தைகள் பேசி போராளிகளின் நடமாட்டத்தை அறிய உங்களை மிரட்டுவார்கள் உங்களை விலைபேசுவார்கள். துரோகிகள், அப்போதுதான் நீங்கள் விலைபோகாமல் விழித்திருக்கவேண்டும் உங்கள் விழிப்புத்தான் எமது விடுதலையைப் பெற்றுத்தரும்.
இப்போதெல்லாம் போராட்டத்தைக்காட்டிக் கொடுத்தவர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து உங்களை ஆகாயத்திற்கு கொண்டு செல்வோம் அபிவிருத்தியூடாக என்று ஆசைவார்த்தைகள் சொல்வார்கள் அதற்கு நீங்களே தகுந்த பதில் சொல்ல வேண்டும்.
“சோற்றுக்காக சுதந்திரத்தை விற்கும் ஈனர் கூட்டமல்ல” நாங்கள் என்று அடித்து பதில் சொல்லுங்கள்.
எதற்காகவும் துரோகிகளின் பாசறைக்கு செல்லாதீர்கள் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அபிவிருத்தி மக்கள் நலன் எமது மாவட்டம் என்று வரும் துரோகிகளிடம் ஒன்றைக் கோளுங்கள் எமக்காகப்போராடி மரணித்த மாவீரன லெப்கேணல் ஜீவன் நினைவாக மக்களால் கட்டப்பட்ட நினைவு சிலையை சிங்களப்படை உடைத்து ராஜபத்திரனமாவத்த என சிங்களப்படை பெயர் சூட்ட உங்கள் மண், மக்கள் பற்று எங்கேபோனது.
எமது மானத்தைக் காத்து உலகில் தமிழர்களை தலைநிமிரவைத்த மாவீரர்கள் உறங்கிய (தரவை, தாண்டியடி, கண்டலடி) துயிலுமில்லங்களை சிங்களப்படை புல்டோசர் போட்டு உடைக்கும் போது அவர்களோடு சேர்ந்து அதை உடைத்தீர்களே நீங்களா அபிவிருத்தி செய்யப்போகின்றீர்கள் என்று கேளுங்கள்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
துரோகிகளின் எந்தவொரு கூட்டத்திற்கும் செல்லாதீர்கள். எமது போராளிகளின் நடமாட்டத்தை எந்தவழியிலும் மற்றவர்களுக்கு சொல்லாதீர்கள்.
அவர்களுக்கு உணவழித்து பாதுகாருங்கள். அதுவும் இந்த தேசவிடுதலைப்போரின் உங்கள் பங்களிப்பேயாகும். இழப்புக்களைக் கண்டு அஞ்சாதீர்கள் ஏனெனில் இழப்புக்கள் எமக்கு புதியவையல்ல.
இழப்புக்கள்தான் எமக்கு வழி காட்டியாய் இருந்திருக்கின்றது. நாம் ஒன்றிணைந்தால் விரைவில் விடுதலையை வெல்வோம். நீங்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றும் விடுதலைக்கானதாக இருக்கட்டும் நம்பிக்கையோடு தொடர்வோம்.
“இருண்ட பொழுது விடிந்தே தீரும்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அரசியல்துறை.
மட்டக்களப்பு மாவட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்;
தமிழீழம்.
Saturday, 2 August 2008
பதில் சொல்வோம் - அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு மாவட்டம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment