கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஆதரவாளர்கள் 33 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டு நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வர மீனவர்களின் உரிமைகளை மீளப் பெறும் நோக்கில் கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கச்சதீவில் இந்தியக் கொடியை ஏற்றும் நோக்கில் செல்ல முயன்ற அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாத்துரை உள்ளிட்ட 33 பேரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்தனர்.
Saturday, 16 August 2008
கச்சதீவில் இந்தியக் கொடியை ஏற்ற முயற்சித்த இந்து மக்கள் கட்சியினர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment