மட்டக்களப்பு குடும்பிமலையில் (தொப்பிகலை) சிறீலங்கா படையினர் மீது இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, மாடு மேய்ப்பதற்காகச் சென்ற பொதுமக்கள் ஐவர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தரவை, பெரியவட்டவான் பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் படையினர் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியால் சென்ற பொதுமக்கள் சுமார் 500 பேர் வரையில் முழங்காலில் இருக்குமாறு படையினரால் தண்டிக்கப்பட்டதாகவும், மேலும் சிலர் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடும்பிமலை, தரவை, மியாங்குளம், அலியாவோடை, பெரியவட்டுவான் பகுதிகளைச் சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளனர்.
Friday, 8 August 2008
தொப்பிகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஐவர் காணாமல் போயுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment