
முல்லைத்தீவு நகர் நோக்கி இன்று அதிகாலை 1:00 மணியளவில் சிறீலங்கா படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்தியதில், ஒன்றரை அகவையுடைய சங்கீர்த்தராணி ஜெகன் என்ற சிறுமி பலியானதுடன், மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
படையினரது செறிவான எறிகணையில் முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார், மற்றும் 3 அகவையுடைய விஜயகாந்த பேகன் (Vijayakanth Began), 5 அகவையுடைய விஜயகாந்த ஆரலிலி (Vijayakanth Arelili) உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு பொது மருத்துவமனை, முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை உள்ளிட்ட பகுதிகளே தாக்குதலுக்கு இலக்காகின.
இதன்போது முல்லைத்தீவு பொது மருத்துவமனை, கட்டிடடங்கள், வீடுகள் என்பவும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மீதான தாக்குதலில், அந்த மருத்துவமனை அதிகாரி சண்முகராஜாவின் மனைவி 36 அகவையுடைய ரேணுகாவும் காயமடைந்துள்ளார்.
மக்கள் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது பல்குழல் எறிகணைகள், மற்றும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால், பொதுமக்கள் மத்தியில் பாரிய பதற்ற நிலை காணப்பட்டது.
எறிகணை வீச்சு பற்றி விபரித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார், தனது அரச செயலக விடுதிக்கு அருகில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது, கட்டிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகவும், அதன்போது எறிகணையின் துண்டுகள் பட்டு காயமடைந்திருப்பதாகவும் கூறினார்.
சிறீலங்கா படையினர் வீசிய எறிகணைகள் நீராவிப்பிட்டி. உடுப்புக்குளம், குமாபுரம், தண்ணீரூற்று போன்ற பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.



Friday, 8 August 2008
(3வது இணைப்பு)முல்லைத்தீவில் கடுமையான எறிகணை, சிறுமி பலி, அரச அதிபர் உட்பட 16 பேர் காயம், மருத்துவமனையும் சேதம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment