Friday, 8 August 2008

இந்திய விமானப்படையின் பிரதானிகள் 5 நாட்கள் இலங்கையில்

இந்தியாவின் சென்னையில் உள்ள இந்திய விமாப்படையின் தென்பிராந்திய தலைமையத்தில் இருந்த இலங்கை சென்ற விமானப்படையினர் 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 ரக உலங்குவானூர்தி திருத்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படையின் பிரதானிகள் உள்ளிட்ட குழவினர் எதிர்வரும் 11 ஆம் திகதி இந்தியா திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தோழிற்நுட்ப கோளாறுகாரணமாக மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை அனுராதபுரம் விமானப்படை முகாமின் பொறியிலாளர்கள் திருத்தியமைத்துள்ளனர்.


எனினும் வெளியாகியாகி உள்ள இந்திய உலங்குவானூர்தி மற்றும் அதன் படையினர் தொடர்பிலான தகவல்களை தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கை விமானப்படையின் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments: