Sunday, 10 August 2008

அந்தமானில் பயங்கர நிலநடுக்கம் மக்கள் பீதி

 அந்தமான் தீவுகளில் இன்று பிற்பகல் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி தாக்கக் கூடுமோ என்று மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளது. இதனால் அந்தமான் முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.

போர்ட்பிளேரிலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

இன்று பிற்பகல் 1.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 முதல் 7 விநாடிகளுக்கு உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தையடுத்து வீடுகள், கட்டடங்களிலிருந்து மக்கள் பீதியுடன் வெளியில் ஓடி வந்தனர். சுனாமி அலைகள் தாக்கக் கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிகிறது.

வட அந்தமான் பிராந்தியம் முழுவதும் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. அதேபோல தலைநகர் போர்ட்பிளேரிலும் உணரப்பட்டுள்ளது.

No comments: