Sunday, 10 August 2008

கிழக்கில் இன்று இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இன்று இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் படையினரது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் உந்துருளியில் சென்றுக் கொண்டிருந்த போதே படையினர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இவர் சோதனை சாவடியில் இருந்து படையினரின் உத்தரவை மீறிச் சென்றதன் காரணமாகவே சுடப்பட்டதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

மற்றும் ஒரு தகவலின்படி, இவர் சயனைட் உட்கொண்டு மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உண்மைத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை திருகோணமலை உப்புவெளி காவற்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட நிலாவெளி பெரியகுளம் பிரதேசத்தில் இன்று மாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனால் இவர் இன்னும் இனங்காணப்படவில்லை.

No comments: