நாட்டுக்குள் ரஷிய படை புகுந்து சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 1500 பேர் பலியானார்கள்.
முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து தனியாக பிரிந்த நாடுகளில் ஒன்று ஜார்ஜியா. இந்த நாட்டின் தெற்கு ஒசிடியா மாநிலம்.
இந்த மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி பிரிவினை வாதிகள் போராட்டம் நடத்தி வரு கிறார்கள். போராட்டம் நடத்தும் இவர்களுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருவதாக ஜார்ஜியா குற்றம் சாட்டியது. இந்த நிலையில் பிரிவினை கேட்கும் தீவிரவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் ரஷியாவும் போரில் குதித்தது. எல்லையில் பாது காப்பு பணியில் இருந்த 10 ரஷிய வீரர்களை ஜார்ஜியா ராணுவம் கொன்று விட்டதாக கூறி ஜார்ஜியாவின் ஓசிடியா பகுதிக்குள் ரஷிய ராணுவம் புகுந்தது.
தரை வழியாக 6000 ராணுவத்தினரும் கடல் மார்க்கமாக 4000 ரஷிய வீரர்களும் ஜார்ஜியாவுக்குள் நுழைந்தனர். இது தவிர ரஷிய போர் விமானங்களும் ஒசிடியா பகுதியில் சரமாரி யாக குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் நடந்த தாக்குதல், ரஷிய விமானங் கள் குண்டுவீச்சு ஆகியவற்றில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். பலியா னவர்களில் பெரும்பாலான வர்கள் பொதுமக்கள். குண்டுவீச்சில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
ஒசிடியா நகரம் தீ பற்றி எரிகிறது. டிபிலிசி நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஜார்ஜியா விமானப்படை தளம் குண்டுவீசி தகர்க்கப்பட்டது. கருங்கடல் பகுதியில் ஜார்ஜியா நிறுத்தி வைத்திருந்த சில எண்ணை கப்பல்கள் மீதும் ரஷிய விமானங்கள் குண்டு வீசின. இதில் அந்த எண்ணை கப்பல்கள் எரிந்தன.
இந்த போரை உடனடியாக நிறுத்தும்படியும் பேச்சு வார்த்தை நடத்தும்படியும் இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள் ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
Sunday, 10 August 2008
ரஷ்ய படை குண்டு வீசி ஜார்ஜியாவை தாக்கிய்து:- 1500 பேர் சாவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment