Saturday, 9 August 2008

வறுமையால் தான் பெற்ற பிள்ளைகளை பரிதவிக்க விட்டு தலைமறைவாகிய தாயார் கைது

தான் பெற்ற பிள்ளைகள் இருவரையும் நடுவீதியில் பரிதவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகிய தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் அக்மீமன பகுதி வீதியொன்றில் போடப்பட்டிருந்த ஆறுமாதங்களான பெண்குழந்தையும் அருகேயிருந்த ஐந்து வயதுடைய ஆண் குழந்தையையும் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அக்மீனப் பொலிஸார் மீட்டு காலிகராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்


குறித்த தாய் அன்றையதினமே காலி குறுந்துவத்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தாய் விசாரணையின் போது தெரிவித்ததாவது தனது கணவர் சிறையிலுள்ளார் எனவும் தன்னால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத காரணத்தினாலேயே வீதியில் வைத்து விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: