கொழும்பு ஒறுகொடவத்தைப் பிரதேசத்தில் உள்ள சட்டபூர்வமற்ற எல்லாக்கட்டிடங்களையும் வீடுகளையும் இம் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் இடித்துத் தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கட்டிடங்களும் வீடுகளும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு காரணமாக தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் குடியிருக்கும் ஏராளமான குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன.
ஏற்கெனவே அங்கு குடியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கோ எது வித கணிப்பீடுகளையோ நடவடிக்கைகளையோ அரசாங்கம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே சிலேவ் ஐலன்ட் பகுதியில் அரசாங்கம் எடுத்த இவ்வாறான நடவடிக்கையால் பெருமளவான மக்கள் நிர்க்கதியானதோடு அது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் அரசாங்கத்தின் அந்த நடவடிக்கைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Saturday, 9 August 2008
ஒறுகொடவத்தையிலும் மக்களை விரட்டியடிக்க தயாராகிறது அரசாங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment