Saturday, 9 August 2008

மட்டக்களப்பு தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் கொழும்பில் கைது

மட்டக்களப்பு கொழும்பு மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் சாரதியும் நடத்துனரும் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இந்தப் பேருந்து கொழும்பு மருதானை தரிப்பிடத்தில் தரித்து நின்ற வேளை நேற்று இரவு அங்கு சென்ற காவற்துறையினர் இவர்களைக் கைது செய்ததுடன் பேருந்தையும் மொறட்டுவ காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இராசையா சிவச்சந்திரன் மற்றும் குருக்கல் மடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ் சேனுகாந்தன் என பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments: