Saturday, 9 August 2008

மட்டக்களப்பில் இருகிளைமோர் தாக்குதல்: 10 விசேட அதிரடிப்படையினர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
(08-08-2008) அன்று காலை 10 மணிக்கும் மதியம் 12மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் சிறிலங்கா படையினரக்கு எதிராக நடைபெற்ற இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்களில் 10ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதில் சிலர் காயமடைந்துமுள்ளார்கள். இத்தாக்குதலில் காயமடைந்தவர்களை அங்கு விரைந்த விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ஏற்றிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தினை அங்குள்ள விடுதலைப்புலிகளும் உறுதி செய்திருக்கின்றார்கள்.

தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளிடமிருந்து அரசபடை மீட்டுவிட்டதாக அரசு கூறிய பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: