Saturday, 2 August 2008

கறுப்புயூலை நினைவு கூரலில் தென்னாபிரிக்கத் தலைவரின் உரை.

சில உலகநாடுகள் விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதும், இன்னும் சில நாடுகள் விடுதலைப்புலிகளுடன் பேச மறுப்பதுவும் சிறிலங்காப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தடங்கலாக இருக்கின்றன.

என ஏ.என்.சி அரசுப் பிரமுகர் சிசா நிஜேகிலானா.

3000 தமிழர்கள் கறுப்புயூலைக் கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதிலும் கூடிய எண்ணிக்கையில் றுவாண்டா, புருன்டி ஆகிய நாடுகளில் படுகொலைகள் நடந்துள்ளன.


உலக சமுதாயம் பற்றிய கரிசனை காட்டியதாகத் தெரியவில்லை. தமது மக்களின் உரிமைகளுக்காக விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்கள் உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் போராட்டங்களையும், விழிப்பூட்டல்களையும்,

பிரச்சார நடவடிக்கைகளையும் ஓயாது முன்னெடுக்கவேண்டும். தனது விடுதலைக்காகத்தாமே உழகை;கவேண்டும். பிறர் கையை எதிர்பார்க்க முடியாது.


சிறிலங்காத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு தென்னாபிரிக்க அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.


சிறிலங்காவில் நடக்கும் கொடிய இனப்போர் பற்றிய தனது கவலைகளைத் தென்னாபிரிக்க அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். தனது சர்வதேசப் பொறுப்புக்களில் இருந்து அதனால் விலகி நிற்கமுடியாது.


தென்னாபிரிக்க ஊடகங்கள் தமிழ் மக்களின் துன்பதுயரங்கள் பற்றிய செய்திகளை விரிவாக வெளியிடவேண்டும் தமிழர்நலனில் அக்கறை காட்டவேண்டியபொறுப்பு போராடிவிடுதலைபெற்ற எமக்கு உண்டுஎன்று தனது பேருரையில் அவர் குறிப்பிட்டார்.

எமது கரிசனையை நாம் தற்சமயம் மூன்று விதமாகக் காட்டலாம். தென்னாபிரிக்காவில் சர்வதேச மட்டப்பிரமுகர்கள் சந்திப்பு ஒன்றைக் கூட்டி சிறிலங்கா விவகாரம் பற்றிய முன்னர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.


இரண்டாவதாக இந்தச் சந்திப்பில் பங்கேற்ற பிரமுகர்கள் சிறிலங்கா அரசுமீது உதவவேண்டும். புதிதாக ஐ.நா அதிகாரியாக நியமனம் பெற்ற நவநீதம்பிள்ளை அம்மையார் ஊடாக தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வகைசெய்யவேண்டும் என்றும் அவர்எடுத்துச் சொன்னார்.

தென்னாபிரிக்கா யூலை 25, 2008

No comments: